< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம்
|14 Oct 2023 1:36 AM IST
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள கங்கர் செவல் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 4-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கே.லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் என்ற பட்டாசு தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதைதொடர்ந்து அவரது குடும்பத்துக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு தொகைக்கான ஆணைகளை சிவகாசி வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் சுந்தரேசன், கணேசன் குடும்பத்தினரிடம் வழங்கினார். 10 நாளில் உரிய நிவாரணம் வழங்கிய அதிகாரிகளுக்கு கணேசன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.