< Back
மாநில செய்திகள்
உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
நீலகிரி
மாநில செய்திகள்

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

தினத்தந்தி
|
14 Jun 2022 2:01 PM GMT

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு கலெக்டர் நிவாரணம் வழங்கினார்

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்