< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம்: ஏ.எம்.விக்கிரமராஜா வழங்கினார்
|28 Dec 2023 2:13 AM IST
சென்னை அயனாவரத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை,
சென்னை அயனாவரத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு நிதி உதவியை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.