< Back
மாநில செய்திகள்
தென் மாவட்ட பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள்: கமல்ஹாசன் அனுப்பிவைத்தார்
மாநில செய்திகள்

தென் மாவட்ட பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள்: கமல்ஹாசன் அனுப்பிவைத்தார்

தினத்தந்தி
|
2 Jan 2024 1:18 AM IST

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மூலமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை நெல்லை மண்டல செயலாளர் பிரேம்நாத் முன்னின்று ஒருங்கிணைத்தார். தற்போது, லயன்ஸ் கிளப்புடன் இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வக்கீல் அணியின் மாநில செயலாளரான ஸ்ரீதர், லயன்ஸ் கிளப்புடன் ஒருங்கிணைத்து சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திரட்டித்தந்திருக்கிறார். அவர்களுடன் கோவை மண்டலம் மகளிர் அணியினர், பெங்களூரு கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர், அனைத்து கட்சி நிர்வாகிகளும் நிவாரண பொருட்களைத் திரட்டி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்