< Back
மாநில செய்திகள்
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும்
விருதுநகர்
மாநில செய்திகள்

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும்

தினத்தந்தி
|
18 Oct 2023 2:10 AM IST

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர்கள் கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூறினர்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு அமைச்சர்கள்சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் வந்தனர். அங்கு பட்டாசு வெடிவிபத்தில் காயடைந்து சிகிச்சை பெற்று வரும் பொன்னுத்தாயை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் டாக்டர்களிடம் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்த இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் அமைச்சர்கள் கூறுகையில், பட்டாசு வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண நிதி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்தில் உயிரிழந்த முனீஸ்வரியின் மகள் சந்தியாவின் படிப்பு செலவை அரசு ஏற்பதுடன் அந்த மாணவிக்கு இலவச வீட்டு மனை பட்டடா வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெடி விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்