< Back
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் பாதிப்பு: வெள்ளம் வெளியேறவில்லை எனக்கூற முடியாது, கடல் உள் வாங்காததால்தான் வெள்ளம் வடியவில்லை    - மா.சுப்பிரமணியன் பேட்டி
மாநில செய்திகள்

மிக்ஜம் புயல் பாதிப்பு: வெள்ளம் வெளியேறவில்லை எனக்கூற முடியாது, கடல் உள் வாங்காததால்தான் வெள்ளம் வடியவில்லை - மா.சுப்பிரமணியன் பேட்டி

தினத்தந்தி
|
10 Dec 2023 11:02 AM IST

ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால்தான் பள்ளிக்கரணை, வேளச்சேரியில் பாதிப்பு அதிகமானது.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு முகாம் தொடங்கி வைத்த பின்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். ஒருவர் கூட விடுபட்டு போகாத வகையில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். மீட்பு , நிவாரண, மருத்துவ நடவடிக்கைகள் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் இருக்கின்றன.

ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால்தான் பள்ளிக்கரணை, வேளச்சேரியில் பாதிப்பு அதிகமானது. செங்கல்பட்டில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதாலும் வெள்ள பாதிப்பு அதிகம்.

எந்த ஆண்டு பருவமழையோடும் ஒப்பிட முடியாத வகையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. வெள்ளம் வெளியேறவில்லை எனக் கூற முடியாது, கடல் உள் வாங்காததால்தான் வெள்ளம் வடியவில்லை 2015ல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது.

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுத்திருக்கவில்லை.வெள்ள பாதிப்புகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாருக்கு தார்மீக உரிமை கிடையாது.

வெளி மாவட்டங்களில் இருந்து 5,000க்கும் மேற்பட்டோர் வந்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் தொண்டு நிறுவனங்களும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது மாநகராட்சி பணியாளர்கள் மட்டுமே தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் மூலம் தேங்கிய மழைநீர் விரைந்து அகற்றப்பட்டது

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்