< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி
|28 March 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். இவ்வாறு வரப்பெற்ற 325 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை கலெக்டர் மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.