< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு
|15 Oct 2023 12:13 AM IST
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து நேற்று கன அடி தண்ணீர் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று அல்லது நாளை கரூர் மாவட்ட எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணையின் நேற்றைய நீர்மட்டம் 67.13 அடி இருந்தது. அணைக்கு 310 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தனர். அணையிலிருந்து ஆற்றுக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையில் 2191.25 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.