< Back
மாநில செய்திகள்
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
மாநில செய்திகள்

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
10 Nov 2023 10:51 AM IST

தண்ணீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மதுரை,

தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நள்ளிரவில் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வினாடிக்கு 2,271 கன அடி தண்ணீர் அணையில் உள்ள பிரதான 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 3 கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 33-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த நிலையில், வைகை அணையில் இருந்து பெரியார் பாசன பகுதிக்காக 900 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த தண்ணீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் செய்திகள்