< Back
மாநில செய்திகள்
நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்; கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்
மாநில செய்திகள்

நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்; கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

தினத்தந்தி
|
10 Oct 2023 10:40 PM IST

நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

நீண்டகால சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மேலும் இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இந்த குழு நடத்திய ஆய்வில் 264 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான கோப்புகள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீண்டகால சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு முன்விடுதலை செய்யக்கோரி அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வருவதாகவும், அது தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.



மேலும் செய்திகள்