< Back
மாநில செய்திகள்
குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தினத்தந்தி
|
9 April 2024 9:32 AM IST

வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 காலிப்பணியிடங்களுக்கு குருப் 2ஏ தேர்வு நடத்தப்பட்டது.

சென்னை,

குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -2, 2ஏ (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்தாண்டு நடைபெற்றது.

இதில் குரூப் 2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் கடந்த ஜனவரியில் வெளியானது. இந்த நிலையில், நேர்முகத் தேர்வு கொண்ட 5,990 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்