< Back
மாநில செய்திகள்
பேச்சிப்பாறை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பேச்சிப்பாறை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

தினத்தந்தி
|
17 Dec 2023 12:04 PM IST

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி,

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோதையாறு, பரளியாறு, குழித்துறை ஆகிய ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்