< Back
மாநில செய்திகள்
பூண்டி ஏரியில் இருந்து 2,500 கனஅடி உபரிநீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மாநில செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து 2,500 கனஅடி உபரிநீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
27 Sept 2023 9:19 PM IST

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 34.25 அடியை எட்டிய நிலையில், ஏரிக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கன அடியில் இருந்து 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்