< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் திறப்பு
|9 Aug 2022 9:24 AM IST
அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகத்தில் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக கடந்த மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அன்று முதல் நேற்று வரை அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வருகிறது. அணைக்கு வரும் வரத்து நீரானது உபரிநீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.050 அடியாகவும், நீர் இருப்பு 93.5559 டி.எம்.சியாகவும் உள்ளதால், அணைக்கான நீர்வரத்து 1,44,000 கன அடியாகவும் உள்ளது. இதனால், அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றது.