< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி கல்குவாரி தொடர்பான  ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி கல்குவாரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை

தினத்தந்தி
|
21 July 2022 9:49 PM IST

ஆண்டிப்பட்டி கல்குவாரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

ஆண்டிப்பட்டி அருகே சேடப்பட்டி பகுதியில் மதுரை விசாலாட்சி நகரை சேர்ந்த தொழில் அதிபர் சரவணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களை கொண்டு நேற்று இந்த குவாரி தொடர்பான நபர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக குவாரி தொடர்புடைய நபர்கள், தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்