< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொள்ளாச்சியில் விமரிசையாக நடைபெற்ற ரேக்ளா போட்டி
|4 July 2022 6:03 AM IST
ரேக்ளா போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ரங்கம்புதூரில் ரேக்ளா பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பந்தயத்தில் கோவை, ஈரோடு, உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
இதில் 100 மீட்டர், 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இலக்குகளை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து செல்வதை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.