< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை
|14 Oct 2023 12:20 AM IST
தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நடந்தது.
நொய்யல் அருகே முத்தனூரில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தையொட்டி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நடைபெற்றது. அப்போது, தீயணைப்பு வீரர்கள் மழையின் காரணமாக தண்ணீர் அதிகமாக இருந்தால் தங்களுக்கு கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்து காட்டினர். அதேபோல் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.