< Back
மாநில செய்திகள்
ரூ.100 கோடியில் போரூர் ஏரி கால்வாய் சீரமைப்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ரூ.100 கோடியில் போரூர் ஏரி கால்வாய் சீரமைப்பு

தினத்தந்தி
|
25 Jun 2022 1:43 PM IST

ரூ.100 கோடியில் போரூர் ஏரி கால்வாய் சீரமைக்கப்பட்டது.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது போரூர் ஏரி. மழைக்காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மதனந்தபுரம், முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் கலக்கும்.

தற்போது உபரி நீர் செல்லும் கால்வாய் குடியிருப்புகளாக மாறி விட்டதாலும் ஏரியின் குறுக்கே தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதாலும் உபரி நீர் செல்வதற்கு வழி இல்லாமல் பரணிபுத்தூர், பட்டூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு பெய்த மழையின்போது இந்த பகுதிகள் முழுவதும் வெள்ள பாதிப்புக்குள்ளானது.

இதையடுத்து ரூ.100 கோடியில் உபரி நீர் கால்வாய் மேம்படுத்துதல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. கொளுத்துவான்சேரி சாலையில் தந்தி கால்வாயில் இருந்து போரூர் ஏரியின் நீர் கால்வாய் வரை புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல், போரூர் ஏரியில் இருந்து ராமாபுரம் ஓடை வரை மூடி வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமீலா பாண்டுரங்கன், சுதாகர், ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்