சென்னை கடற்கரை ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு - தமிழக அரசு
|மெரினா - கோவளம் வரை சுமார் 30 கிமீ தூர கடற்கரை பகுதி, ரூ.100 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக இருப்பது மெரினா கடற்கரையாகும். சென்னை மாநகர பொதுமக்கள் பொழுது போக்குவதற்கும், காற்று வாங்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் இந்த கடற்கரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும், இந்த கடற்கரையின் அழகை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வருகிறார்கள்.
இந்த நிலையில், மெரினா - கோவளம் வரை சுமார் 30 கிமீ தூர கடற்கரை பகுதி, ரூ.100 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்பட உள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதிதுறை செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தில் சிறப்பு நோக்க நிறுவனம் உருவாக்க அனுமதி அளித்துள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.