< Back
மாநில செய்திகள்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம்- கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம்- கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
30 Dec 2022 10:18 PM IST

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் பதிவாகும் வகையில் நேஷனல் மொபைல் மானிடரிங் சிஸ்டம் ஆப் வாயிலாக இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் (தனிநபர் திட்ட பணிகள் தவிர) இணையதளத்தில் பதிவாகும் வகையில் வருகையை பதிவு செய்தல் வருகிற 1-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்று திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் என்.எம்.எம்.எஸ் (NMMS) ஆப் A வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின்கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குறைகளை தீர்ப்பதற்காக தினேஷ்குமார் மார்டின் என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண்.8925811302 மின்னஞ்சல்முகவரி (ombudsnregschengalpattu@gmail.com).

எனவே, பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்