< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்க கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு
|1 Dec 2022 10:00 AM IST
வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் குறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பவர்கள் குறித்த விவரங்களை கேட்டு பெறவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு தொடங்கவும் மண்டல பதிவாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.