நாகப்பட்டினம்
வட்டார அளவிலான தடகள போட்டிகள்
|வட்டார அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.
வேதாரண்யம்வட்டார அளவிலான தடகள போட்டிகள்வாய்மேடு அருகே சரபோஜிராஜபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதை தலைமை ஆசிரியர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். குறுவட்ட இணை செயலாளர் சரவணன் வரவேற்றார். ஒலிம்பிக் கொடியினை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெய்னுதின் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி குமார், வனிதா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தியாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால், உடற்கல்வி ஆசிரியர் மரிய டெல்சியா மதி, தலைமை ஆசிரியர் அகோரமூர்த்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மதியழகன், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க தலைவர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், தட்டு எறிதல் உள்ளிட்ட 17 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம், பதக்கத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.