< Back
மாநில செய்திகள்
வட்டார அளவிலான கலைத்திருவிழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வட்டார அளவிலான கலைத்திருவிழா

தினத்தந்தி
|
21 Oct 2023 11:53 PM IST

வட்டார அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது.

மணமேல்குடி ஒன்றியத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இசை, நடனம், பாடல், ஓவியம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9 முதல் 10-ம் வகுப்பு வரையும், 11 முதல் 12-ம் வகுப்பு வரையும் என 3 பிரிவாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிரிய பயிற்றுனர்கள், கலை திருவிழா உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆவுடையார்கோவில் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது.

மேலும் செய்திகள்