< Back
மாநில செய்திகள்
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
மாநில செய்திகள்

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
28 Feb 2024 10:13 AM IST

இன்று மாலை தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

வி.சி.க. 4 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.விடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும், 4 தொகுதிகளில் ஒரு தொகுதி பொது தொகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கிறது. சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்