< Back
மாநில செய்திகள்
வைகை அணை பாதுகாப்பு குறித்து  பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

வைகை அணை பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
15 July 2022 10:27 PM IST

வைகை அணை பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மதகு, மதகில் தண்ணீர் திறந்து விடப்படும் பகுதி, அணையின் நீர்தேக்கப் பகுதி, நீர்மட்டத்தை குறிக்கும் கருவி, மழை அளவு குறிக்கும் எந்திரம், சுரங்கப்பாதை, கசிவு நீர் மற்றும் 58-ம் கால்வாய் பகுதி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்