< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு
|22 Sept 2022 12:15 AM IST
திண்டிவனம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு வாலிபர் மீது வழக்கு
திண்டிவனம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் ரஞ்சிதா(வயது 25). திருமணம் ஆன இவர் கருத்து வேறுபாடு காரணமான கணவரை பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் ரஞ்சிதாவின் தாய்வழி உறவினரான திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடு பேட்டை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராம் சுந்தர்(26) அவரை காதலிப்பதாக கூறி பழகி வந்த நிலையில் திடீரென திருமணத்துக்கு மறுத்ததோடு தட்டிக்கேட்ட ரஞ்சிதாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சுந்தர் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.