< Back
மாநில செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகேஉல்லாசம் அனுபவித்துவிட்டு நர்சிங் மாணவியை திருமணம் செய்ய மறுப்புகாதலன் கைது
கடலூர்
மாநில செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகேஉல்லாசம் அனுபவித்துவிட்டு நர்சிங் மாணவியை திருமணம் செய்ய மறுப்புகாதலன் கைது

தினத்தந்தி
|
25 Sept 2023 12:15 AM IST

சேத்தியாத்தோப்பு அருகே உல்லாசம் அனுபவித்துவிட்டு நர்சிங் மாணவியை திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர். இவரது மகன் அருண் (வயது 22). இவர் வளையமாதேவி பகுதியில் உள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு, அதேபகுதியில் உள்ள மற்றொரு கிராமத்தில் நண்பர் உள்ளார். அவரை அடிக்கடி அருண் பார்க்க சென்றார். அப்போது, இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து, அருண் மாணவியிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

தற்கொலை முயற்சி

இந்த சூழ்நிலையில் நநர்சிங் மாணவி தனது மேல்படிப்பிற்காக வெளியூறுக்கு சென்றார். அப்போது, அருணுக்கு அவர் போன் செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அருண் மறுப்பு தெரிவித்துவிட்டார். எனது அத்தை மகளை திருமணம் செய்யுமாறு என்னிடம் எனது தந்தை கூறிவருகிறார் என்று நர்சிங் மாணவியிடம் அருண் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த நர்சிங் மாணவி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதன்பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாணவி வீடு திரும்பினார்.

கொலை மிரட்டல்

இதன் பின்னர், மாணவியின் பெற்றோர் அருண் வீட்டிற்குச் சென்று தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். அப்போது அருண் திருமணத்திற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்