< Back
மாநில செய்திகள்
நிலம் கையகம் குறித்த புத்தாக்க பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நிலம் கையகம் குறித்த புத்தாக்க பயிற்சி

தினத்தந்தி
|
20 July 2022 7:22 PM GMT

நிலம் கையகம் குறித்த புத்தாக்க பயிற்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிலம் கையகம் தொடர்பான 3 நாள் புத்தாக்க பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. பயிற்சியை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்து பேசுகையில், பயிற்சியில் நிலம் கையகம் குறித்த வழிமுறைகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பு பயிற்சி பெற்ற சப்-கலெக்டர்களை (துணை ஆட்சியர்) கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நிலம் தொடர்பான சரியான புரிதல், தெளிவான அறிவுரைகள் இல்லாத காரணத்தினால் பல்வேறு கோப்புகள் முடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதனை சரி செய்வதற்கும், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கும் இப்பயிற்சினை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் நிர்வாக அனுமதி பெறுதல், தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையக சட்டம் 1997, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001, நிலம் மதிப்பு நிர்ணயம், நிலம் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனைகள் மீதான அறிக்கை சமர்ப்பித்தல் உள்பட பல்வேறு நிலைகளில் நிலம் கையகத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இதனை முறையாக கற்று கொண்டு அலுவலகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முனியப்பன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்