< Back
மாநில செய்திகள்
மதுரையில் போலீஸ் வாகனத்தின் பின்னால் சென்று ரீல்ஸ் வீடியோ - 2 இளைஞர்கள் கைது
மாநில செய்திகள்

மதுரையில் போலீஸ் வாகனத்தின் பின்னால் சென்று ரீல்ஸ் வீடியோ - 2 இளைஞர்கள் கைது

தினத்தந்தி
|
31 March 2023 7:45 PM IST

அவதூறான வசனங்களை சேர்த்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை நத்தம் சாலையில் ரோந்து பணிக்கு சென்ற போலீஸ் வாகனத்தை இளைஞர்கள் 2 பேர் தங்கள் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அதனை வீடியோவாக பதிவு செய்த அவர்கள், அதில் அவதூறான வசனங்களை சேர்த்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், வீடியோ வெளியிட்ட ரகுபதி மற்றும் கண்ணன் ஆகிய 2 இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



மேலும் செய்திகள்