< Back
மாநில செய்திகள்
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைப்பு

தினத்தந்தி
|
20 Dec 2022 6:23 PM IST

நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. நீர் தேக்கத்தின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி ஏரியிலிருந்து உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. நேற்று காலை பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியே வெளியாகி வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். நேற்று காலை 6 மணிக்கு நீர்மட்டம் 34.06 அடியாக பதிவாகியது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 38 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு 1,520 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

மேலும் செய்திகள்