உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வு மையங்கள் குறைப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
|நிர்வாக காரணங்களால் கணினி தேர்வு மையங்கள் குறைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வு, வருகின்ற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் கணிணி வாயிலாக நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி வேலூர், நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள கணினி தேர்வு மையங்கள் நீக்கப்படுவதாகவும், சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் மட்டும் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் கணினி தேர்வு மையங்கள் குறைக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.