< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரம் குறைப்பு
|17 Nov 2022 10:54 PM IST
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
மதுரை,
மதுரை செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
அதன்படி நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சியில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக, 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும்.
இந்த ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு, 45 நிமிடங்கள் முன்பாகவே செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.