< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மூவர்ணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை
|2 Aug 2022 9:59 PM IST
சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண மின்விளக்குகளால் செஞ்சிக்கோட்டை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் செஞ்சி கோட்டை ஜொலிக்கிறது.
செஞ்சி,
சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண மின்விளக்கால் செஞ்சிக்கோட்டை ஜொலிக்கிறது.நாட்டின் சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையின் மதில் சுவர்கள் மூவர்ண நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் செஞ்சிக்கோட்டை தற்போது மூவர்ணத்தில் ஜொலிக்கிறது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.