< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

தினத்தந்தி
|
18 May 2024 2:51 PM IST

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (19 மற்றும் 20-ந்தேதி) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (18-ந்தேதி), 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்