< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
2-ம் நிலை காவலர்கள் 42 பேருக்கு பணிநியமன ஆணை
|28 May 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்கள் 42 பேருக்கு பணிநியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வழங்கினார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 15 பெண்கள், 27 ஆண்கள் என மொத்தம் 42 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்கள் 42 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பணி நியமன ஆணை வழங்கி, நேர்மையுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.