< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
திருச்சி
மாநில செய்திகள்

போக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

தினத்தந்தி
|
19 March 2023 8:42 PM GMT

போக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.

திருச்சி மாநகரில் காலியாக உள்ள போக்குவரத்து காப்பாளர் (டிராபிக் வார்டன்) பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். அதன்படி திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று போக்குவரத்து காப்பாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது. போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் விக்னேஷ்வரன், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஜோசப் நிக்சன், போக்குவரத்து காப்பாளர் முருகைய்யன் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் திருச்சி மாநகரில் வசிப்பவர்களாகவும், பட்டம் படித்தவர்களாகவும் இருக்க வேண்டும். 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். முன்னதாக தேர்வுக்கு வந்தவர்களுக்கு உயரம், எடை அளக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தேர்வானவர்களுக்கு கமிஷனர் சத்தியப்பிரியா பணி ஆணை வழங்குவார் என்று போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து காப்பாளர்கள் திருவிழா காலங்கள், பண்டிகை நாட்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுதல், பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்