< Back
மாநில செய்திகள்

விழுப்புரம்
மாநில செய்திகள்
மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு

3 Jun 2022 12:35 AM IST
விக்கிரவாண்டி அருகே மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஏரிக்கரை வாய்க்காலில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்த் சுப்புராயன் மனைவி ஆனந்தாயி (வயது 89) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானதோடு, மர்மமான முறையில் வாய்க்காலில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தாயி சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.