< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு
|13 Sept 2023 12:26 AM IST
கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கழுமலைநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் பஸ் நிலையம் அருகில் உள்ளது. இந்த நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீசார், வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், கோவில் செயல் அலுவலர் முரளிதரன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50 சென்ட் நன்செய் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். மேலும் நிலம் தொடர்பாக அப்பகுதியில் பதாகை வைக்கப்பட்டது.