< Back
மாநில செய்திகள்
குன்னூரில் ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
நீலகிரி
மாநில செய்திகள்

குன்னூரில் ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
7 Sept 2023 6:15 AM IST

குன்னூரில் ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குன்னூர்

குன்னூரில் ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆக்கிரமிப்பு நிலம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வருவாய் துறையினருக்கு சொந்தமான சுமார் 1½ ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் தனியார் கிளப் மூலம் சிலர் டென்னிஸ் விளையாட்டு மையமாக பயண்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலம் கடந்த 1937-ம் தண்டு அப்போதைய ஆங்கிலேயர் அரசு குத்தகைக்கு வழங்கியது. பின்னர் வருவாய்த் துறை ஆவணங்களின் படி இந்த குத்தகையை கடந்த 2003-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட கலெக்டர் ரத்து செய்தார்.

இதனை எதிர்த்து கிளப் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிலத்தை மீட்டு பொது மக்களின் நலனுக்காக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

விளையாட்டுத்துறையிடம் ஒப்படைப்பு

இந்த தீர்ப்பு வருவாய்த்துறையினருக்கு சாதகமாக இருந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் வருவாய் துறையினர் மவுண்ட்பிளசணட் பகுதியில் தனியார் கிளப் ஆக்ரமித்திருந்த 1½ ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மீட்டனர். இதன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அந்த நிலம் மாவட்ட விளையாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் பொது மக்களும் இந்த மைதானத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்