< Back
மாநில செய்திகள்
திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்து மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்து மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
15 Oct 2022 1:56 PM IST

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள 15 கிரவுண்டு மனை ஆக்கிரமிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அதனை மீட்கப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும்.

இந்த சொத்து மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இந்த சொத்தை குத்தகைக்கு வழங்கிடும் வகையில் பொது ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலின் மேம்பாட்டுக்கு செலவிடப்படும். கோவில் சொத்து மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன் மற்றும் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்