திருவள்ளூர்
பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
|பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
நிலம் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் வருவாய் கிராமத்தில் தாங்கல் நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதுகுறித்து பல்வேறு புகார்கள் வருவாய் துறைக்கு வந்தது. இதை தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரின் நில அளவியல் துறையினர் நிலத்தை மதிப்பீடு செய்து அளந்தனர். அப்போது நீர் நிலைக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் ஆக்கிரக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ரூ.2 கோடி நிலம் மீட்பு
பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரூ.2 கோடி மதிப்புள்ள 50 சென்ட் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை மீட்டனர்.அப்போது மண்டல துணை தாசில்தார் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, நில அளவையர் சுமன், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் பொன்னேரி போலீசார் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.