< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே ரூ.15 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ரூ.15 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
19 Jun 2022 2:30 PM IST

காஞ்சீபுரம் அருகே ரூ.15 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முசரவாக்கம், பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முசரவாக்கம் ஏரியில் ரூ.15 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு கையகப்படுத்தி அறிவிப்பு பலகையை வைத்தனர்.

மேலும் செய்திகள்