< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு
|19 Aug 2023 11:59 PM IST
ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.
பெரம்பலூர் ஒன்றியம், வடக்கு மாதவி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சோமண்டாபுதூர் கைகாட்டி அருகே சுமார் 1 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவின்படி, தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் கள ஆய்வு செய்ததில், நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு, அந்த நிலம் மீட்கப்பட்டது. அந்த நிலத்தில் 100 நாள் வேலை தொழிலாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணியினை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலுார் மாவட்டத்தில் நிலங்களை ஆக்கிரமிப்பது கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கலெக்டர் எச்சரித்தார்.