சென்னை
100 ஆண்டுகளாக தனியார் வசமிருந்த ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
|சென்னை,
சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தண்டையார்பேட்டையில் அரசுக்கு சொந்தமான நிலம் சென்னை மாவட்ட கலெக்டரால் 1923-ம் ஆண்டு முதல் 99 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு பல்வேறு குத்தகை நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு கோபால் நாயக்கர் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.
1985 முதல் 1998 வரையிலான காலத்துக்கு குத்தகை தொகை ரூ.3 கோடியே 76 லட்சத்து 3 ஆயிரத்து 930 நிர்ணயம் செய்து சார்பு செய்யப்பட்ட கோட்பு அறிவிப்பினை எதிர்த்து குத்தகைதாரர் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
31-03-2018 வரையிலான காலத்துக்கு கணக்கிடப்பட்ட தோரய குத்தகைய நிலுவை தொகை ரூ.26 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 542-ஐ செலுத்தாமல் இருந்துள்ளனர். குத்தகை விதி மீறல் கண்டறியப்பட்டதால் கடந்த 2019 அன்று குத்தகை ரத்து செய்யப்பட்டது.
குத்தகை நிலத்தை அரசு மீட்டு எடுக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, குத்தகை நிலத்தில் செயல்பட்டு வந்த நிறுவனங்கள் அனைத்தையும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகளாக தனியார் வசமிருந்த நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடியாகும்..
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.