< Back
மாநில செய்திகள்
கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

தினத்தந்தி
|
18 May 2023 12:00 AM IST

பெரியம்மாபாளையத்தில் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரியம்மாபாளையம கிராமத்தில் அமைந்துள்ள 0.88 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் செல்வராஜூக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெரியம்மாபாளையம் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்