திருவள்ளூர்
காரனோடை அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
|காரனோடை அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்க்கப்பட்டது.
பொன்னேரி அடுத்த காரனோடை அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளம் மற்றும் சாணாங்குட்டை ஆகிய பொது நிலம் உள்ளது. இதனை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்திருந்ததார். எனவே தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்த இடையுறு இருப்பதாக இருந்து வந்தது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் உத்தரவின் பேரில் சர்வேயர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அந்த நிலத்தை அளவீடு செய்த போது அரசுக்கு சொந்தமான இடம் என்பது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ரூ.50 லட்சம் மதிப்புள்ள 21 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டதால் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் ஞாயிறு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.