< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே ரூ.90 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே ரூ.90 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
23 Dec 2022 5:59 PM IST

செங்கல்பட்டு அருகே ரூ.90 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

நிலம் ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து தள்ளி விவசாய நிலங்களை மீட்டனர்.

ரூ.90 கோடி

60 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.90 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பகுதியில் காவல்துறை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்ட இருப்பதால் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்