< Back
மாநில செய்திகள்
மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
3 Jun 2023 1:03 AM IST

பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான அரணாரை அருகே 25 ஏக்கர் நிலம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து பெரம்பலூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) லட்சுமணன் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், வக்கீல் ஆனந்தராஜ், நில அளவையாளர் கண்ணதாசன், நிர்மல்குமார் ஆகியோர் ரூ.5 கோடி மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்