< Back
மாநில செய்திகள்
கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர் மீட்பு
கடலூர்
மாநில செய்திகள்

கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர் மீட்பு

தினத்தந்தி
|
25 Oct 2023 6:45 PM GMT

திருப்பாதிரிப்புலியூரில் கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளரை அதிகாரிகள் மீட்டனர்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானப்பிரகாசம் தலைமையில் முதல் மற்றும் இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (சைல்டு லைன்) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் பணிபுரிகிறார்களா? என கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு கடையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர் பணிபுரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள், கடை உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர். மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழில்களிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்