< Back
மாநில செய்திகள்
ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு

இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான 36 சென்ட் பரப்பளவுடன் கூடிய தானியக் களஞ்சியத்தில் பக்தர்கள் பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு வெங்கடாச்சலம் என்பவருக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கி இருந்தது.

ஆனால், மோசடி ஆவணம் மூலம் இந்த சொத்தில் தேவஸ்தானம் இடைஞ்சல் செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி கோர்ட்டில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்து அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பை கோர்ட்டு வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தானியக் களஞ்சியம் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. அந்த இடத்தை இந்து சமய உதவி ஆணையர் தங்கம், குமரிமாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள் மீட்டு 'சீல்' வைத்தனர். மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.18 கோடியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தையொட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்